/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாத்தோப்பில் காங்., ஆர்ப்பாட்டம்
/
சேத்தியாத்தோப்பில் காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 08, 2024 06:37 AM

சேத்தியாத்தோப்பு : கீரப்பாளையம் வட்டார காங்கிரஸ் சார்பில் சேத்தியாதோப்பு ஸ்டேட் பாங்க் கிளை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கீரப்பாளையம் வட்டார தலைவர்கள் செழியன், பழனிவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். சீனு, அன்பரசன், கீரப்பாளையம் கிராம கமிட்டி தலைவர் பார்த்திபன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சேரன், எஸ்.சி., எஸ்.டி., மாவட்ட தலைவர் பாலையா, மாவட்ட செயலாளர் ஜெகன் மாவட்ட பொதுக்குழு மகாராஜன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ., மோடி அரசு தேர்தல் பத்திரங்களை உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்க மறுக்கும் ஸ்டேட் பாங்க் செயலை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்டார துணை தலைவர் மணிவண்ணன், வட்டார பொருளார் இளங்கோவன், எஸ்சி எஸ்.டி., மாவட்ட செயலாளர் இளையபெருமாள், எஸ்.சி.எஸ்டி., பிரிவு வட்டார தலைவர் பாலு, மாவட்ட செயலாளர்கள் மோகன், மணிவாசகம், ஜோதி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், தவசி, ஜெயக்குமார், மாவட்ட துணை தலைவர் சீத்தாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

