/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., செயல்வீரர்கள் கூட்டம் மேலிட பொறுப்பாளர் பங்கேற்பு
/
காங்., செயல்வீரர்கள் கூட்டம் மேலிட பொறுப்பாளர் பங்கேற்பு
காங்., செயல்வீரர்கள் கூட்டம் மேலிட பொறுப்பாளர் பங்கேற்பு
காங்., செயல்வீரர்கள் கூட்டம் மேலிட பொறுப்பாளர் பங்கேற்பு
ADDED : நவ 25, 2025 05:10 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் காங்., மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். விஷ்ணு பிரசாத் எம்.பி., மாவட்ட பொறுப்பாளர் மெய்யப்பன் முன்னிலை வகித்தனர். கடலுார் மாவட்ட மேலிட பொறுப்பாளர் கே.பி.ஆர்., நாயுடு ஆலோசனை வழங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜன், நகர தலைவர் ரஞ்சித்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, வட்டார தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக மேலிட பொறுப்பாளர் கே.பி.ஆர்.,நாயுடு கூறுகையில், 'காங்., கட்சி சார்பில் சங்கடன் சரிஜன் அபியான் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக இருந்ததால் அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய முக்கிய நோக்கம் அனைத்து கட்சியினரையும் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து ஒரு வலிமையான மாவட்ட தலைவரை நியமிக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.
சட்டசபை தேர்தல் வருவதால், அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கட்சி அளவிலும், பூத் கமிட்டி அளவிலும் ஒரு வலிமையான அமைப்பை உருவாக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பரில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் பணியை துவங்குவர்' என்றார்.

