/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு
/
தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு
ADDED : நவ 25, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் புறவழிச்சாலையில், தி.மு.க., தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார்.
தொகுதி மேற்பார்வையாளர் குலோத்துங்கன், எழுத்தாளர் இமயம், நகராட்சி சேர்மன் டாக்டர் சங்கவி முருகதாஸ் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார்.
அமைச்சர் சிவசங்கர் அலுவலகத்தை திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, கனககோவிந்தசாமி, வேல்முருகன், பேரூராட்சி செயலாளர் செல்வம், நிர்வாகிகள் மணிவேல், வசந்தகுமார் பங்கேற்றனர்.
நகர துணை செயலாளர் ராமு நன்றி கூறி னார்.

