/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் தீவிரம்
/
விருதை ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் தீவிரம்
ADDED : ஜன 24, 2025 11:15 PM

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் 5.75 கோடி ரூபாயில் புதிய ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி துவங்கியுள்ளது.
விருத்தாசலம், கடலுார் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்படுகிறது. இங்கு 51 ஊராட்சிகளின் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், 19 ஒன்றிய கவுன்சிலர்கள் அன்றாட பணிகளுக்கு வந்து செல்கின்றனர். கிராமங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள், அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இடநெருக்கடி மற்றும் பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, 5.75 கோடி ரூபாயில் புதிய ஒன்றிய அலுவலகம் கட்ட அனுமதி பெறப்பட்டது. இதற்காக அதே வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலக மாடியில் தற்காலிக அலுவலம் மாற்றப்பட்டது.
பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரமாக துவங்கியுள்ளது. தரைதளம், முதல் தளம் ஆகிய கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் முடிந்து, வரும் 2026 ஜனவரி பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.