/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டட தொழிலாளி தவறி விழுந்து சாவு
/
கட்டட தொழிலாளி தவறி விழுந்து சாவு
ADDED : ஜன 08, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே கோவிலில் கட்டுமான பணி செய்த முதியவர் தவறி விழுந்து இறந்தார்.
கடலுார் முதுநகர் மாலுமியார்பேட்டையை சேர்ந்தவர் லெனின்,76; மேல்பட்டாம்பாக்கம் கோவிலில் நடக்கும் திருப்பணி வேலையில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அப்போது, 6 அடி உயர சாரத்தில் இருந்து லெனின் தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்தவர் புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.