/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் மீது பஸ் மோதி விபத்து கட்டட தொழிலாளி பலி
/
பைக் மீது பஸ் மோதி விபத்து கட்டட தொழிலாளி பலி
ADDED : அக் 25, 2025 11:20 PM
சிதம்பரம்: சிதம்பரத்தில் பைக் மீது பஸ் மோதிய விபத்தில் கட்டட தொழிலாளி பலியானார்.
சிதம்பரம் காசிம் கான்பேட்டை தெருவை சேர்ந்தவர் மணி மகன் பாலமுருகன், 40; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் பாலமுருகன் தனது மோட்டார் சைக்கிளில், வீரசோழகன் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்து தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட பாலமுருகன் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் பாலமுருகனை மீட்டு, கடலுார் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி சத்யா கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

