ADDED : நவ 27, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: கட்டட தொழிலாளி தற்கொலை செய்துக் கொண்டார்.
பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்,41; கட்டட தொழிலாளி. கடந்த ஓராண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், தொடர் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
அதில் விரக்தியடைந்த சுரேஷ், நேற்று (நவ.,26) வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் இன்று (நவ.,27) சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
