/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டட தொழிலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
கட்டட தொழிலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 29, 2024 11:58 PM

கடலுார்: தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் கடலுார் மாவட்ட நல வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் சேகர், ஸ்ரீமுஷ்ணம் தலைவர் செல்வராஜ், பி.முட்லுார் செயலாளர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தனர்.
இதில், கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சட்டம், நல வரி வசூல் சட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும், நல வாரியம் மூலமாக, மருத்துவ வசதி, காப்பீடு பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட தலைவர் குளோப், கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் கலியபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

