ADDED : ஜன 03, 2024 12:26 AM
வடலூர்: வடலூர் பார்வதிபுரத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்க ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது
சங்க நிர்வாகி ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். சக்திவேல், அசோக் முன்னிலை வகித்தனர். ஜோதி வரவேற்றார். மாவட்ட தலைவர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
தொழிலாளர்கள் கோமேதகவேல், ராமாயி, ஜோதி, பாக்கியலட்சுமி, ரங்கநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழக அரசு, கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும், வரும் 25ம் தேதி நடைபெறும் தைப்பூச விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர், பொது கழிப்பறை, போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். ஜோதி தரிசனத்தின் போது கூட்ட நெரிசலை தவிர்க்க வெளிப்புறத்தில் டிஜிட்டல் திரையில் தரிசனம் காணும் வகையில், 5 இடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.