/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் சாகுபடிக்கான கலந்தாய்வு கூட்டம்
/
நெல் சாகுபடிக்கான கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஆக 11, 2025 11:06 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுாரில் நெல்லில் மேம்படுத்தப்பட்ட சாகுபடிக்கு விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்லைக்கழக அறிவியல் நிலையம் சார்பில் நடந்த கூட்டத்தில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் நடராஜன் தலைமை தாங்கினார். இயற்கை விவசாயி ராமதாஸ், தனுக்கா அக்ரிடெக் மேலாளர் மேகநாதன், விற்பனை அலுவலர் முனியன் முன்னிலை வகித்தனர்.
பின்பட்ட சம்பா நடவு பிபிடி., நெல் ரகங்களுக்கு மாற்றாக புதிய ரகங்களான ஏ.டி.டி. 52, ஏ.டி.டி.54, டி.கே.எம்.13 போன்ற அதிக விளைச்சல் தரும் ரக நெல்களை நடவு செய்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வேளாண் அறிவியல் நிலைய உதவி அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார்.