/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பு நடவு குறித்து ஆலோசனை கூட்டம்
/
கரும்பு நடவு குறித்து ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 09, 2025 12:36 AM
பெண்ணாடம்,; பெண்ணாடம் அடுத்த கோனுார் கிராமத்தில் இறையூர் எஸ்.என்.ஜெ., அம்பிகா சர்க்கரை ஆலை சார்பில், கரும்பு நடவு செய்வது குறித்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஆலையின் கரும்பு மேலாளர் குமணன் தலைமை தாங்கினார். பெண்ணாடம் கரும்பு கோட்ட அலுவலர் தாமோதரன் முன்னிலை வகித்தார். கரும்பு ஆய்வாளர்கள், முன்னோடி விவசாயிகள், கரும்பு விவசாயிகள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், எஸ்.என்.ஜெ., சர்க்கரை ஆலை அறிவித்த கரும்பு நடவு மானியம் மற்றும் 2024 - 25 அரவைக்கான ஊக்கத்தொகை மானியங்கள் வழங்குவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதற்கான துண்டு பிரசுரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும், கரும்பு நடவுக்கு புதிய தொழிற்நுட்பம் கையாளுவது, விதை நேர்த்தி, பூச்சி நோய் கட்டுப்பாடு மற்றும் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்வது மூலம் வெட்டுக்கூலியை குறைப்பது ஆகியன குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

