நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி; திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநில துணை செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் பேரின்பம் முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் முருகானந்தம், மங்களூர் ஒன்றிய தலைவர் ராமலிங்கம், மகளிரணி தலைவர் பரிமளா, செயலாளர் செல்வி, துணை செயலாளர் செல்வம்பாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராம ஆதிதிராவிட மக்களுக்கு மனை பட்டா, சாலை வசதி, குடிநீர், மகளிர் சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத அதிகாரிகளை கண்டித்து வரும் 16ம்தேதி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

