நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் முடி திருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்க கடலுார் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கொளஞ்சி, மாநில பிரதிநிதிகள் சக்கரவர்த்தி, சக்திவேல், சுரேஷ், மோஷ்மேன், பாலகுரு, நாகராஜ், ரங்கசாமி முன்னிலை வகித்தனர்.
முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அழகுவேலுக்கு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
மாவட்ட பொருளாளர் செல்வராசு நன்றி கூறினார்.

