நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அடுத்த அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை மையத்தில் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் விவசாயிகள் ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது.
அட்மா திட்ட தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். விதை நேர்த்தி செய்வதால் கிடைக்கும் பலன்கள், தமிழக அரசின் மானிய திட்டங்கள், மரக்கன்றுகள் வழங்குதல், டிஜிட்டல் கிராப் சர்வே, பயீர் காப்பீடு திட்டங்கள் பற்றி உதவி இயக்குனர் சுரேஷ், தோட்டக்கலை உதவி இயக்குனர் லட்சுமிதேவி, பொறியியல் துறை அலுவலர் கணேஷ் விளக்கம் அளித்தனர்.
விவசாயிகளை வெளிமாநில விவசாய சுற்றுலா அழைத்து செல்லுதல், பண்ணை பள்ளி, வயல் தினவிழா நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.