
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர், புலனாய்வு மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரிகள் சட்ட நெறிமுறைகளை சரியாக பின்பற்றி புலனாய்வு செய்ய வேண்டும்.
குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டனை பெற்றுத்தர வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், ரகுபதி, குற்றவியல் துணை இயக்குனர் வைத்தியநாதன், அரசு உரிமையியல் வழக்கறிஞர் ராமன் மற்றும் கடலுார் மாவட்டத்திலுள்ள உதவி அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

