
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, அனைத்து கட்சிஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா தலைமை தாங்கினார். தாசில்தார் அரவிந்தன் முன்னிலை வகித்தார்.
இதில், தி.மு.க., நகர துணை செயலர் ராமு, வழக்கறிஞர் அருள்குமார்; அ.தி.மு.க., நகர செயலர் சந்திரகுமார், தங்கராசு; தே.மு.தி.க., நகர செயலர் ராஜ்குமார்; வி.சி., தென்றல்; பாஜ., காங்., கம்யூ., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப் போது, சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

