
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் ஓய்வு பெற்ற காவலர்கள் நலக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
பாலச்சந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் சிவமணி, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., மணவாளன் ஆகியோர் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினர். தொடர்ந்து காவலர்கள் தங்களின் பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டு நலம் விசாரித்தனர்.
கூட்டத்தில், செல்வம், சந்திரமூர்த்தி, கோபால்சாமி, ராமமூர்த்தி, சக்திவேல், ராஜமோகன், அண்ணாமலை, பாலாஜி கஜேந்திரன், ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

