/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிேஷகம் குறித்து ஆலோசனை
/
வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிேஷகம் குறித்து ஆலோசனை
வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிேஷகம் குறித்து ஆலோசனை
வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிேஷகம் குறித்து ஆலோசனை
ADDED : டிச 23, 2024 05:24 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிேஷம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
நெல்லிக்குப்பத்தில் தமிழக அறநிலையத் துறை கட்டுபாட்டில் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் மூலவர் சிலைகள் அத்தி மரத்தாலானது சிறப்பாகும்.
கோவில் கும்பாபிேஷகம் நடத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாவதால் திருப்பணிக்காக அறநிலையத்துறை 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகள் முடியும் நிலையில் உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி கோவில் கும்பாபிேஷகம் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதற்கான செலவை உபயதாரர்கள் மூலம் செய்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம் செயல் அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.உபயதாரர்களிடம் வசூல் செய்வது சிரமமாக உள்ளதால் அறநிலையத் துறை மூலமே கும்பாபிேஷகம் செய்ய வேண்டுமென பக்தர்கள் மனு அளித்தனர்.
உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக செயல் அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.

