தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வர்த்தக அமைப்புகளுடன் ஆலோசனை

 வர்த்தக அமைப்புகளுடன் ஆலோசனை

 வர்த்தக அமைப்புகளுடன் ஆலோசனை


ADDED : பிப் 28, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி பிப். 28-: கடலுார் மேற்கு மாவட் டம், நெய்வேலி சட்டசபை தொகுதியில் முக்கியப் பிரமுகர்கள், வர்த்தக சங்கங்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், டாக்டர் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கணேசன் தலைமையில் நடந்தது.

சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசினார். தொகுதி வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை தொடர்பான பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் எழுப்பப்பட்ட தேவைகள் மற்றும் பரிந்துரைகளை தொகுத்து, தமிழக முதல்வரிடம்

அறிக்கையாக சமர்ப்பித்து, உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். கூட்டத்தில் தொகுதி பார்வையாளர் துரைசாமி மாவட்ட பொருளாளர் தண்டபாணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் புகழேந்தி, அறிவழகன், ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார், சுமதி, நந்தகோபால், ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், ஜெகநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் அன்பழகன், சுப்ரமணியன், பொன்னம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us