/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுகர்வோர் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
/
நுகர்வோர் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
ADDED : மே 24, 2025 11:51 PM
நெல்லிக்குப்பம்: நெலிக்குப்பத்தில் தமிழ்நாடு நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் புதிய தலைவராக செல்வம், கவுரவ தலைவராக கண்ணன், துணை தலைவராக ராமசந்திரன், பொது செயலாளராக மெய்யழகன், சட்ட ஆலோசகராக விஜயன், துணை செயலாளர்களாக விஜயபாலன், ஆறுமுகம், பொருளாளராக ராஜ்முகமது, மகளிரணி ஒருங்கிணைப்பாளராக வீரசுந்தரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பின், நடந்த கூட்டத்தில், நெல்லிக்குப்பம் நகராட்சியில் நுகர்வோர் கூட்டம் நடத்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது. நகராட்சியில் நடக்கும் பணிகள் பற்றிய விபரங்கள் அறிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
பெட்ரோல் பங்குகளில் அளவு சரியாக வழங்குகிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.