/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மந்தாரக்குப்பத்தில் தொடரும் ஆக்கிரமிப்புகள் வாகன ஒட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம்

ADDED : நவ 04, 2024 05:47 AM
மந்தாரக்குப்பம், : கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மந்தாரக்குப்பம் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் வாகன ஒட்டிகள் வாகன விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதி வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைதுறை கோடிக்கணக்கில் பணம் செலவழித்து நான்கு வழிச்சாலை இப்பகுதியில் அமைத்து உள்ளனர். ஒரு சில மாதங்கள் மட்டுமே நான்கு வழிச்சாலை வாகன ஒட்டிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது.
தற்போது கடைகள் முன்பு வியாபாரிகள் தங்களின் எல்லையை கடந்து சாலையில் செட் மற்றும் விளம்பர போர்டுகளை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அத்தியவாசிய பொருட்கள வாங்க வரும் வாடிக்கையாளர்கள் சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் தினசரி வாகன விபத்துக்களில் ஏராளமா னோர் சிக்கி உயிர் சேதம் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஒட்டிகள் எதிர்பார்க்கின்றனர்