/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடர் கனமழையால் பெரிய ஏரி நிரம்புகிறது
/
தொடர் கனமழையால் பெரிய ஏரி நிரம்புகிறது
ADDED : நவ 25, 2025 05:12 AM

வேப்பூர்: தொடர் மழை காரணமாக வேப்பூரில் பெரிய ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேப்பூர் ஊராட்சியில் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இதன் மூலம் 100 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், 50 ஏக்கர் விளை நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.மேலும், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையையும் பெரிய ஏரி பூர்த்தி செய்கிறது.
கடந்த சில நாட்களாக வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தொடர் மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை பெரிய ஏரி நிரம்பி மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் வெளியேற்றும் அளவு அதிகரித்து வருகிறது. தண்ணீர் வெளியேறும் இடத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் மொபைல் போனில் 'செல்பி' மற்றும் 'ரீல்ஸ்' எடுத்து விளை யாடுகின்றனர்.
நீர்நிலைகளில் இதுபோன்ற ஆபத்தான செயலில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

