ADDED : அக் 16, 2024 07:18 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை தொடர்மழையாக பெய்தது. அதையொட்டி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நேற்று முன்தினம் காலை 6:30 மணிமுதல் நேற்று காலை 6:30 வரையில், வடக்குத்தில் அதிகபட்சமாக 59 மி.மீ., மழை பதிவாகியது. மேலும் பரங்கிப்பேட்டை 43.8, கலெக்டர் அலுவலகம் 43, கடலுார் 42, வானமாதேவி 40, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 38, குறிஞ்சிப்பாடி 38, புவனகிரி 38, சிதம்பரம் 37.8, கொத்தவாச்சேரி 37, அண்ணாமலைநகர் 34, பண்ருட்டி 32, சேத்தியாத்தோப்பு 27.5, லால்பேட்டை 26.2, காட்டுமன்னார்கோவில் 25, வேப்பூர் 23, ஸ்ரீமுஷ்ணம் 21.2, விருத்தாசலம் 20.2, மேமாத்துார் 18, குப்பனத்தம் 15.2, பெலாந்துறை 14.2, காட்டுமயிலுார் 14, கீழ்ச்செருவாய் 13, லக்கூர் 9.4, தொழுதுார் 7 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.