/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒப்பந்ததாரர்கள் மிரட்டல்: மக்கள் அச்சம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் அடாவடி

ADDED : அக் 08, 2025 12:07 AM
சிறப்பு பக்கம்...
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பில் சாலை, கழிவுநீர் கால்வாய் என வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களே டெண்டர் எடுத்து பணி செய்கின்றனர்.
இவர்களுக்கு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆதரவு உள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு சில ஒப்பந்ததாரர்கள் பணியை தரமாக செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணி நடைபெறுவதை கண்காணிக்க பணி மேற்பார்வையாளர் உள்ளார்.
இருப்பினும் பல இடங்களில் அதிகாரிகள் இல்லாமலேயே ஒப்பந்ததாரர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பணிகளை செய்வதால் தரம் குறைவாக உள்ளது. பணி தரமாக இல்லையென தட்டிக் கேட்டால் ஒப்பந்ததாரர்கள் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பணி நடைபெறும் இடத்துக்கு அதிகாரிகள் சென்று கண்காணித்தால் இதுபோன்ற தவறுகளை தடுப்பதோடு பணியையும் தரமாக செய்ய முடியும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.