/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல்
/
பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல்
பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல்
பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல்
ADDED : அக் 07, 2025 07:25 AM

கடலுார்; கடலுார் பீச்ரோட்டில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இது கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பேரூராட்சி அலுவலகங்களின் தலைமையிடமாக உள்ளது. இங்கு, நேற்று 3 மாவட்ட அதிகாரிகளுக்கான கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தீபாவளி வசூல் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டி.எஸ்.பி., சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், அலுவலக முதல் தளத்தில் கணக்கில் வராத 5 லட்சத்து 74 ஆயிரத்து 960 ரூபாய் பணம் கைப்பற்றப் பட்டது.