/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காவலாளியை தாக்கி ரீல்ஸ்; 3 ரவுடிகளுக்கு 'குண்டாஸ்'
/
காவலாளியை தாக்கி ரீல்ஸ்; 3 ரவுடிகளுக்கு 'குண்டாஸ்'
காவலாளியை தாக்கி ரீல்ஸ்; 3 ரவுடிகளுக்கு 'குண்டாஸ்'
காவலாளியை தாக்கி ரீல்ஸ்; 3 ரவுடிகளுக்கு 'குண்டாஸ்'
ADDED : அக் 07, 2025 07:24 AM

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் காவலாளியை கொடூரமாக தாக்கி, இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்ட 3 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம், பழமலைநாதர் நகர், ரவுடிகள் கந்தவேலு, 22, சிவா (எ) விக்னேஷ், 22, பாலாஜி, 23. இவர்கள், கடந்த மாதம் 9ம் தேதி இரவு அங்குள்ள திருமண மண்டப காவலாளி கார்த்திக், 45; மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவேற்றினர்.
விருத்தாசலம் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரை கைது செய்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் கந்தவேலு காயமடைந்தார். விக்னேஷ் கை, கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டது.
இவர்களில் கந்தவேலு, விக்னேஷ் மீது விருத்தாசலம், கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷன்களில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனவே, மூவரின் குற்றச்செயலை தடுக்கும் வகையில் எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவை பிறப்பித்தார்.தொடர்ந்து, கடலுார் மத்திய சிறையில் உள்ள கந்தவேலு, விக்னேஷ், பாலாஜி ஆகிய மூவரிடம், குண்டாசில் கைது செய்ததற்கான ஆணையை, விருத்தாசலம் போலீசார் நேற்றிரவு வழங்கினர்.