/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு சட்டப்பூர்வ நிதி வழங்கல்
/
கூட்டுறவு சட்டப்பூர்வ நிதி வழங்கல்
ADDED : ஜூலை 06, 2025 06:53 AM

கடலுார் : கடலுாரில் கூட்டுறவு சங்க செயலாளரிடம் வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது.
லால்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் 2023-24ம் ஆண்டுக்கு லாப பிரிவினையில் செலுத்த வேண்டிய சட்டப்பூர்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி தொகைக்கான ஒரு லட்சத்து 10ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கடலுார் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, கடலுார் சங்க செயலாளரிடம் வழங்கினார்.
சிதம்பரம் சரக துணைப் பதிவாளர் ரங்கநாதன், இணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், புருஷோத்தமன், தமிழரசன், சங்க செயலாட்சியர் அந்தோணி, சங்க செயலாளர் சண்முகம், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் ராஜமுத்து உடனிருந்தனர்.