/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு
/
இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 06, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கம்மாபுரத்தில் நிலத்தகராறில் இருதரப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கம்மாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம், கருணாநிதி. உறவினர்களான இவர்களுக்குள், நிலத்தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதில் இரு குடும்பத்தினரும் ஆபாசமாக திட்டி, தாக்கிக் கொண்டனர்.
இருதரப்பு புகார்களின் பேரில், கருணாநிதி, இவரது மகன் கண்ணதாசன் மற்றும் பன்னீர்செல்வம், இவரது மகன் கிருத்தீஸ்வரன், மனைவி கஸ்துாரி ஆகியோர் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.