/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி துவக்கம்
/
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி துவக்கம்
ADDED : ஆக 05, 2025 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி துவக்க விழா நடந்தது.
கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளஞ்செல்வி குத்துவிளக்கேற்றி, பயிற்சியை துவக்கி வைத்துப் பேசினார்.
கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் (பொறுப்பு) கணேசன் வரவேற்றார்.
இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் பாலகிருஷ்ணன், புருஷோத்தமன், கடலுார் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் ராஜமுத்து வாழ்த்திப் பேசினர். விழாவில், மாணவர்கள் மற்றும் மேலாண்மை நிலைய ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலாளர் (பொறுப்பு) நாகலட்சுமி நன்றி கூறினார்.