/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு சிக்கன நாணய சங்க பொதுக்குழு கூட்டம்
/
கூட்டுறவு சிக்கன நாணய சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : செப் 14, 2025 01:38 AM

கடலுார் : தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பின், கடலுார் மாவட்ட சிறப்பு பொதுக்குழு மஞ்சக்குப்பத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழன் வரவேற்றார். மாநில தலைவர் சம்பத், மாநில பொதுச் செயலாளர் கண்ணன், ஓய்வு பெற்ற பணியாளர் கூட்டுறவு சங்க மாநிலத் தலைவர் பரமாத்மா, மாநில துணைத் தலைவர் தாஸ், மாநில இணை செயலாளர் மோகன் பேசினர்.
கூட்டத்தில் 2001, மார்ச் மாதத்திற்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி பணி வரன்முறை செய்ய வேண்டும். நான்காவது ஊதியக்குழு அளித்துள்ள அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
பொது மென்பொருளை சிறிய சங்கங்களுக்கு அமல்படுத்திய பிறகு மற்ற அனைத்து சங்கங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட மகளிரணி செயலாளர் நீலோர்பவமேரி நன்றி கூறினார்.