ADDED : நவ 21, 2025 05:32 AM

கடலுார்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவையொட்டி வெளி ப்படைத் தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மாநில கூட்டுறவு கொள்கை குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கடலுார் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி தலைமை தாங்கினார். சிதம்பரம் சரக துணைப்பதிவாளர் ரங்கநாதன் வரவேற்றார்.
பல்கலை பேராசிரியர்கள் பத்மநாபன், சுசிலா, ருக்மணி பங்கேற்று கருத்துரையாற்றினர்.
விருத்தாசலம் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர் கோகுல், இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், கடலுார் கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜமுத்து மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் பயிற்சியாளர்கள், சங்க செயலாளர்கள், பணியாளர்கள்பங்கேற்றனர். சிதம்பரம் சரக துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் தமிழரசன் நன்றி கூறினார்.

