
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு வார விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புவனகிரி, ஆதிவராகநத்தம் கூட்டுறவு சங்க அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க., கவுன்சிலர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
கூட்டுறவு சார்பதிவாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டுறவு வங்கி செயலாளர் மைனர்செல்வம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக ரமேஷ், சித்ரா, எழுத்தாளர் சுகுமாரன், கலைவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டு இனிப்புகள் வழங்கினர்.

