UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:44 PM

நெய்வேலி: நெய்வேலியில் காப்பர் கேபிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.
நெய்வேலி டவுன்ஷிப் பகுதி வட்டம் - 8ல் என்.எல்.சி நிறுவனத்தின் சோலார் பிளான்ட் அமைந்துள்ளது. இங்கு தனியார் நிறுவனம் ஒன்று, 3 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அங்கு நேற்று மதியம், 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ரூ.,16 ஆயிரம் மதிப்புள்ள, 16 மீட்டர் காப்பர் கேபிள்களை திருடி தப்ப முயன்றனர்.
அவர்களில் ஒருவரை, காவலர்கள் பிடித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், நெய்வேலி வட்டம் - 30, வார்டு - 4ஐ சேர்ந்த சுப்ரமணியன் மகன் சிவபாலன், 30, என்பது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதி்நது சிவபாலனை கைது செய்தனர்.
மேலம், தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த கந்தவேல் மகன் ஆனந்தகுமார், 22, சங்கர் மகன் தேவா (எ) மகாதேவன்,20, ஆகியோரை தேடிவருகின்றனர்.
