தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/என்.எல்.சி.,யில் காப்பர் ஒயர் திருடிய தொழிலாளி கைது

என்.எல்.சி.,யில் காப்பர் ஒயர் திருடிய தொழிலாளி கைது

என்.எல்.சி.,யில் காப்பர் ஒயர் திருடிய தொழிலாளி கைது


UPDATED : அக் 08, 2026 05:07 PM

ADDED : அக் 08, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 05:07 PM ADDED : அக் 08, 2026 04:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி: என்.எல்.சி., அனல் மின் நிலையத்தில் காப்பர் ஒயர் திருடிய ஒப்பந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி அடுத்துள்ள மேலக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் ராஜதுரை.27. இவர் என்.எல்.சி., இரண்டாம் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது, அனல் மின்நிலையத்தின் மெயின் கேட்டில் பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் ராஜ துரையை சோதனை செய்தனர். அப்போது, ராஜதுரை தனது உடையில் மறைத்து 2.8 கிலோ காப்பர் ஒயரை திருடி எடுத்து வந்தது தெரியவந்தது. காப்பர் ஒயரை பறிமுதல் செய்த பாதுகாப்பு படை வீரர்கள் கொடுத்த புகாரின் பேரில் தெர்மல் சப் இன்ஸ்பெக்டர் ஜெரினா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us