UPDATED : அக் 08, 2026 05:19 PM
ADDED : அக் 08, 2026 04:36 PM
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த அருகேரி ஊராட்சி, மேல்நெமிலியில், தமிழ்நாடு வெற்றி திட்டத்தில் அடிப்படை கிராம அளவிலான கணக்கெடுப்பு பணி நடந்தது.
நல்லுார் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சித்ராதேவி தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., மாணிக்கரசி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கோடீஸ்வரன் வரவேற்றார். கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், சுய உதவி குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள் அடங்கிய கணக்கெடுப்பு குழுவினர் வீடு, தெரு வாரியாக கணக்கெடுப்பு செய்து, அடிப்படை தேவையான மின்விளக்கு, சாலை, முழு சுகாதார திட்டம், போர்வெல் அமைத்தல், குடிநீர் தொட்டி அமைத்தல், கழிவுநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து கிராம மக்களிடம் விசாரணை செய்து கணக்கெடுக்கும் பணி நடந்தது. முன்னதாக, கிராம வரைபடம் வரைந்து கிராம மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
