ADDED : ஜூலை 25, 2025 02:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடிப்பூரம் உற்சவத்தை முன்னிட்டு ராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040ம் ஆண்டு விழா நடந்தது.
சோழர்களின் நேரடி வாரிசான பிச்சாவரம் பாளையக்காரர் சூரப்ப சோழனார் தலைமை தாங்கினார். தொடர்ந்து, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. சூரப்ப சோழனார்க்கு கனக சபையில் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கோவில் கொடிமரம் அருகே பரிவட்டம் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன் திருவுருவபடத்துடன், தில்லை காளியம்மன் கோவில் வரை மேள வாத்தியங்கள் முழங்க வீதியுலா சென்றனர். தில்லை காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.