/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை: பொறியாளர் பிரிவு அதிகாரி மீது 'குமுறல்'! கடலுாரில் ஒப்பந்தாரர்கள் வேதனை

ADDED : அக் 22, 2025 12:37 AM
க டலுார் மாநகராட்சியில் உள்ள பொறியியல் பிரிவு அதிகாரி முட்டுக்கட்டை போட்டுவருவதால் எந்த பணிகளும் நடைபெறவில்லை என மேயரே பகிரங்கமாக மாமன்றத்தில் குற்றம் சாட்டினார்.
மாநகராட்சியில் எந்த பணிகளும் நடக்கவில்லை. நடந்த பணிகளுக்கு போதிய பில் வழங்குவதில்லை. அதனால் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுக்க முன் வருவதில்லை. என அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.
இதற்கெல்லாம் காரணமாக இருந்து வருவது இந்த பிரிவின் தலைவராக உள்ள அதிகாரிதான், ஒப்பந்ததாரர்கள் அனுப்பும் எந்த பில்லையும் போடுவதில்லை.
ஏதாவது ஒரு 'கொரி' போட்டு திருப்பி அனுப்பி விடுவார். இதனால் ஒப்பந்ததாரர்கள் வெறுத்துப்போய் இனி எந்த பணியும் செய்வதில்லை என்ற உள்ளனர். இதனால் பல பணிகள் டெண்டர் எடுக்க ஆளில்லாமல் பணிகள் முடங்கி கிடக்கிறது.
அதனால் ஒப்பந்ததாரர்கள் எல்லாம் அந்த அதிகாரி மீது கடும் கோபத்தில் உள்ளனர்.