/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மந்தாரக்குப்பத்தில் போக்குவரத்து விதிமீறல் தடுக்கப்படுமா?
/
மந்தாரக்குப்பத்தில் போக்குவரத்து விதிமீறல் தடுக்கப்படுமா?
மந்தாரக்குப்பத்தில் போக்குவரத்து விதிமீறல் தடுக்கப்படுமா?
மந்தாரக்குப்பத்தில் போக்குவரத்து விதிமீறல் தடுக்கப்படுமா?
ADDED : அக் 22, 2025 12:37 AM

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதியில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மந்தாரக்குப்பம் பகுதியில் வாகன ஓட்டிகள் அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறி வருகின்றனர். இதே போல் சேப்ளநாத்தம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை விதியை மதிக்காமல், ஒரே பைக்கில் 5 பேர் ஒன்றாக பயணம் செய்வது தொடர்கின்றது.
சாலை விதியை மதிக்காமல், இளைஞர்கள் ெஹல்மட் அணியாமால் பயணம் செய்தும் போது, விபத்தில் சிக்கினால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
சாலை விதிகளை மீறி செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.