/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : அக் 22, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: வாலிபரை தாக்கிய,4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
குறிஞ்சிப்பாடி, அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மகன் அறிவுக்கரசு, 28; இவர் தீபாவளியன்று தனது நண்பர்களுடன் குறிஞ்சிப் பாடி எஸ்கேஎஸ்., நகர் சுடுகாடு அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது குருவப்பன் பேட்டை பகுதியை சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக, அறிவுக்கரசை ஆபாசமாக திட்டி, மது பாட்டிலால் தலையில் தாக்கினர்.
சம்பவம் குறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட, 17 வயது சிறுவர்கள் இருவர், குணால், 20; புருஷோத், 20; ஆகிய, 4 பேர் உள்ளிட்டவர்கள் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.