/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பார்க்கிங் பிரச்னை: 3 பேர் மீது வழக்கு
/
பார்க்கிங் பிரச்னை: 3 பேர் மீது வழக்கு
ADDED : அக் 22, 2025 12:38 AM
வடலூர்--: பார்க்கிங் பிரச்னை தகராறில், 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்
வடலூர் அடுத்த பூசாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் மகன் இளவரசன், 28; இவரு க்கும் அதே பகுதியை சேர்ந்த, ராம்குமார் தரப்பிற்கும் இடையே வாகனங்களை நிறுத்துவது தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.
தீபாவளியன்று இளவரசன் பைக்கில் சென்ற போது அவரை ராம்குமார் தரப்பினர் வழிமறித்து ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த இளவரசன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட ராம்குமார், அஜித்குமார், முத்துசாமி ஆகிய 3 பேர் மீது வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.