ADDED : அக் 22, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி சுகாதார அலுவலர் பணியில் இருந்த போது, மாரடைப்பால் இறந்தார். கடலுார் உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்,57; இவர் பண்ருட்டி நகராட்சி சுகாதார அலுவலராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை பணிக்கு வந்த கிருஷ்ணராஜ், துாய்மை பணிகள் குறித்து ஆய்வு செய்துவிட்டு நகராட்சி அலுவலகத்தில் காலை 9:00 மணிக்கு இருந்த போது, சக ஊழியர்களிடம் மயக்கம், நெஞ்சுவலி வலிப்பதாக கூறினார். உழியர்கள் உடனே அவரை பண்ருட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் வழியிலேயே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.