/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ADDED : அக் 22, 2025 12:39 AM
க டந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, திட்டக்குடி (தனி) தொகுதியின் தி.மு.க., வேட்பாளரான தற்போதைய எம்.எல்.ஏ.,வும், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சருமான கணேசன், பெண்ணாடம் பேரூராட்சி வார்டுகளில் ஓட்டு சேகரிக்கும்போது நான் வெற்றி பெற்றால் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி கொடுத்தார்.
அதில், பெண்ணாடம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும், தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை கூறியிருந்தார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.
நாலரை ஆண்டு முடிஞ்சதுதான் மிச்சம்... பெண்ணாடம் பேரூராட்சி நகராட்சியாக இது வரை தரம் உயர்த்தபடவில்லை.
கிடப்பில் போட்ட இந்த வாக்குறுதிகளை வரும் ஆறு மாசத்துல அமைச்சர் கணேசன் நிறைவேற்றுவாரா என என பொது மக்கள் மத்தியில் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.