/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காஸ்மோபாலிட்டன் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு
/
காஸ்மோபாலிட்டன் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : அக் 12, 2025 10:45 PM

கடலுார்; கடலுார் காஸ்மோபாலிட்டன் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் கிளப் வளாகத்தில் நடந்தது.
கிளப் தலைவராக சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, செயலாளராக சரவணன், பொருளாளராக ராமலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கிளப் தலைவர் துரைராஜ் கூறுகையில், 'இந்தியாவில் உள்ள பெரிய கிளப்புகளுடன் இணைந்து கடலுார் காஸ்மோபாலிட்டன் கிளப் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. கடலுார் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 150 ஆகும்.
இதில், தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை 127 ஆகும். மீதமுள்ள 23 உறுப்பினர்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்வது குறித்தும், சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் கூட்டத்தில், ஆலோசிக்கப்பட்டது' என்றார்.