/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்வியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா
/
கல்வியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா
கல்வியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா
கல்வியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா
ADDED : அக் 12, 2025 10:44 PM

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ. கல்வியியல் கல்லூரியில் பி.எட். வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு த.வீ.செ. கல்விக்குழும செயலர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். கல்விக்குழும முதல்வர்கள் பழமுதிர்ச்சோலை, விக்டர்ராஜ், தவஷீலா, கலா, தயாளசிந்தாமேரி, நிரோஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுதா வரவேற்றார்.
இயக்குனர்கள் சுரேஷ், ஆர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ராஜசேகரன், ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் நடராஜன் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு புத்தகம், சீருடை வழங்கப்பட்டது.
பேராசிரியர்கள் செல்வராஜ், அமிர்தவர்ஷினி, ஆரோக்கியமேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் உஷா நன்றி கூறினார்.