ADDED : அக் 12, 2025 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்; நெய்வேலி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு நெய்வேலி நுகர்வோர் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு குழு தலைவர் சக்கரியாஸ் தலைமை தாங்கினார். மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவழகி துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ், வி.ஏ.ஒ.,மணிகண்டன் ஆகியோர் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு உதவி ஆய்வாளர் இளமாறன், தன்னார்வலர் கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்