ADDED : அக் 23, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகில் வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.
காட்டுமன்னார்கோவில், கலைவாணர் தெருவைச் சேர்ந்தவர், செந்தில், 48; பந்தல் அமைக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இவரது வீட்டில் கீற்று வைக்கப்பட்டிருந்த இடத்தில் புகை சூழந்தது. சிறிது நேரத்தில் கீற்று எரிந்ததில் வீடும் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் கீற்று உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.