/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகரமன்ற கூட்டத்தை கூட்ட கவுன்சிலர்கள் கோரிக்கை
/
நகரமன்ற கூட்டத்தை கூட்ட கவுன்சிலர்கள் கோரிக்கை
ADDED : அக் 19, 2024 04:28 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் இரண்டு மாதங்களாக நடைபெறாத நகராட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்று 6 மாதத்துக்கு தொடர்ந்து மாதத்துக்கு ஒரு முறை நகரமன்ற கூட்டம் நடந்து வந்தது.சில மாதங்களில் இரண்டு முறை கூட கூட்டம் நடந்தது.கடைசியாக கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி கூட்டம் நடந்தது. ஆனால் ஆகஸ்ட்,செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் கூட்டம் நடக்கவில்லை.
இதுபற்றி கவுன்சிலர்கள் கூறியதாவது மாதத்துக்கு அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே கூட்டம் நடக்கும்.அதற்கு கூட நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு அதிகாரிகளும் சேர்மனும் மக்கள் பணியாற்றுகிறார்கள் என நினைக்கிறோம்.
மூன்று மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே கூட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.கூட்டம் நடக்காததால் மக்கள் பிரச்னைகளை குறித்த பேசமுடியவில்லை. .மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது கட்டாயம் கூட்டம் நடத்த வேண்டும்.மக்கள் பிரச்னைகளை விவாதிக்க இந்த மாதம் கூட்டத்தை கட்டாயம் நடத்த வேண்டுமென கூறினர்.

