/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'தினமலர் செய்தியால் பணிகள் நடக்கிறது' நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேச்சு

ADDED : அக் 26, 2024 06:44 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டத்தில், சாலையை காணவில்லை என, கவுன்சிலர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம் சேர்மன் ஜெயந்தி தலைமையில் நடந்தது. கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:
கிரிஜா (துணை சேர்மன்): பதவிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் எனது வார்டில் கழிவுநீர் கால்வாய் பணி, சாலை பணி நடக்கவில்லை.
சத்தியா (தி.மு.க): ராமு தெருவில் பல லட்சம் செலவில் போடப்பட்ட சிமெண்ட் சாலை தரமில்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. சாலை போடப்பட்ட 6 மாதத்திலேயே அதை காணவில்லை.
இக்பால்(ம.ம.க): கவுன்சிலர்கள் புகார் கூறினால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. 'தினமலர்' நாளிதழில் செய்தி வந்தால் தான் பணிகள் நடக்கிறது.
புனிதவதி (அ.தி.மு.க): துாய்மை பணியாளர்களுக்கு 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்குவதில்லை.