/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் கலந்தாய்வு துவக்கம்
/
கொளஞ்சியப்பர் கல்லுாரியில் கலந்தாய்வு துவக்கம்
ADDED : ஜூன் 02, 2025 11:47 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், முதல் கட்ட கலந்தாய்வு துவங்கியது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், இளங்கலை முதல்கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. சிறப்பு ஒதுக்கீடு பிரிவில் நடந்த கலந்தாய்வில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், அந்தமான், நிக்கோபார் தமிழ் மாணவர்கள், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர் முனியன் சேர்க்கை படிவத்தை வழங்கினார். நாளை 4ம் தேதி கணினி அறிவியல், வணிகவியல், தமிழ், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கும், வரும் 5ம் தேதி பி.பி.ஏ., பொருளியல், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாட பிரிவுகளுக்கும், 6ம் தேதி தாவரவியல், விலங்கியல், வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாட பிரிவுகளுக்கும் முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.