/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இன்பேண்ட் பள்ளியில் கலந்தாய்வு கூட்டம்
/
இன்பேண்ட் பள்ளியில் கலந்தாய்வு கூட்டம்
ADDED : மே 31, 2025 11:50 PM

விருத்தாசலம்:விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் இன்பேண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
பள்ளி முதல்வர் விஜயகுமாரி தலைமை தாங்கி, அரசு பொதுத்தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள், 'போக்சோ' விழிப்புணர்வு, 100 சதவீத வருகை பதிவேடு மற்றும் சீருடை, நன்னடத்தை விதிமுறைகள் குறித்து பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, 2024 - 25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து, ஊக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, நாளை பள்ளிகள் துவங்க உள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் சிறப்பு ேஹாமம் நடந்தது.